வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 ஜூன், 2010

பாதிப்புற்ற வவு. சிறுவருக்குப் பாடசாலை அமைக்க நடிகர் ஒபரோய் திட்டம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கென வவுனியாவில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாகவும் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் விவேக் ஒபரோய் தெரிவித்தார். 
நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறுகிய காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் தற்போது அமைதி சூழல் உருவாகியுள்ளது. இதனைச் சர்வதேச நாடுகள் உணர்ந்து கொள்ள ஐஃபா திரைப்பட விழா வழிவகுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார். 
பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் தலைமையில் ஐஃபா விருது விழா சம்பந்தமான இச்செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’