இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்றம் பெறுவார்கள் என தாம் நினைக்கவில்லை. என்றாலும், புலம்பெயர்ந்தோர் மற்றும் மேற்க்தைய நாடுகளின் உதவியுடன் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறமுடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்;
அத்துடன், இலங்கையில் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியை போன்று சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்;இந்தியா, 13 வது அரசியலமைப்பு சீர்திருத்த நடைமுறை மற்றும் சீபா உடன்படிக்கை என்ற அடிப்படையில் இலங்கையை தமது கடடுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது
இதேவேளை அமெரிக்கா உட்பட்ட மேற்கத்தைய நாடுகள் இந்தியாவின் ஊடாக இலங்கையை தமது காலடிக்குள் கொண்டு வர முயற்சித்தன.
தற்போது அவை, சிறிய இலங்கையுடன் எலி- பூனை விளையாட்டில் ஈடுபட்டுள்ளன என குணதாஸ அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கெட்டிக்கார அரசியல்வாதி எனவே தான் அவர் இந்தியாவின் 13 வது அரசியலமைப்பு பொறிக்குள் இன்னும் விழவில்லை.
எனினும் சர்வதேச வலைக்குள் வீழ்ந்து ஜனாதிபதி, தென்னிலங்கை இளைஞர்களின் பொருளாதார ஸ்திரப்பாட்டை உறுதிசெய்யாது போனால் வடக்கு,கிழக்கை போன்று மீண்டும் தென்னிலங்கையிலும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்தியா, ஜே ஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்தை போன்று உடன்படிக்கை ஒன்றின் மூலம் தற்போதைய அரசாங்கத்தை பணிய வைக்க முயற்சிக்கிறது.
எனினும் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் எவ்வித நன்மையும் இலங்கைக்கு ஏற்படவில்லை என்பதை யாரும் அறிவர் என குணதாஸ அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்தியா, பாக்கு நீரிணைக்குள் பாலம் அமைப்பதன் மூலம் வடபகுதிக்கு சுமார் 30 ஆயிரம் தமிழர்களை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடடுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனாவும் இந்தியாவும் இலங்கையில் தமது அதிகாரங்களை நிறுவவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்த குணதாஸ அமரசேகர, அமெரிக்கா இந்தியாவின் ஊடாக இலங்கைக்குள் காலடி வைக்க முயற்சித்தது. எனினும் அது முடியாமல் போனது.
இந்தநிலையில் இன்னும் நான்கு தசாப்தங்களுக்குள் உலக சக்திமிக்க நாடுகளாக திகழும் என்பதை உணர்ந்த அமெரிக்கா தற்போது, இதனை தடுப்பதற்காக இலங்கையில் ஊடுருவ முயற்சிக்கிறது. இந்தநிலையில் கெட்டிக்கார அரசியல்வாதி ஒருவரால்தான், இந்தியாவையும் சீனாவையும் ஒருமித்த சமபலத்தில் வைத்து முன்கொணர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கம் மேற்கத்தைய நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றுவாய்களை தடுக்க தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.
எனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து தலைவர்களையும் ஒழிக்கும் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’