வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 ஜூன், 2010

உரிய தீர்வுத் திட்டம் முன் வைக்கப்பட்டால் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்கும் கட்சிக்குள் பிளவு என்பது கேலிக் கூத்து என்கிறார் அரியநேத்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தவொரு பிளவும் கிடையாது  இப்படி அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத் திரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மஹிந்த அரசால் தமிழர் பிரச்சினைக்கு உகந்த தீர்வு முன்வைக்கப்படுமாக இருந் தால் அத்தீர்வை நடைமுறைப்படுத்து வதற்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை  தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு அரசுக்குப் பெற்றுக்கொடுக்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு ஓரிரு நாள்களுக்கு முன் பேட்டி  வழங்கி இருந்தார்.
எப்போதும் எதிர்ப்பு அரசியலையே முன்னெடுத்து வந்த கூட்டமைப்புக்குள் சம்பந்தரின் இக்கருத்தினால் பிளவுநிலை வெடித்துள்ளது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அவர் இப்படி ஒரு நிலைப் பாட்டை எடுத்துவிட்டார் எனக் கூட்ட மைப்பின் சில உறுப்பினர்கள் அதிருப்தி யின் உச்சத்துக்கே சென்று விட்டார்கள் என்றும், எந்த நேரமும் அவர்கள் கூட்டமைப்பை விட்டு விலகக் கூடும் என்றும் அந்த ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இவ்வாறான தகவல்கள் குறித்து அரிய நேத்திரன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.  கூட்டமைப்புக்குள் எந்தப் பிளவுமே கிடையாது என்று அவர் உறுதியாகக் கூறி னார்.
அவர் இது குறித்து தெரிவித்தவை வருமாறு:
எமது தலைவர் சம்பந்தர்  அரசை எல்லா விடயங்களிலும் ஆதரிக்கப்போவதாக ஒருபோதும் கூறவில்லை.
மாறாகத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் , உரிய தீர்வுத் திட் டம் முன்வைக்கப்பட்டால் அதை நிறை வேற்றுவதற்கு  கூட்டமைப்பு நாடாளு மன்றத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கும் என்றே கூறி இருந்தார்.
இது மிகவும் தூர நோக்கும், தெளிந்த சிந்தனையும்,அரசியல் சாணக்கியமும் மிகுந்த நிலைப்பாடாகும்.
எனவே, அவரின் இந்தக் கருத்தினால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட வேண் டிய அவசியமே இல்லை.
அவரின் நிலைப்பாடே கட்சியின் நிலைப்பாடாகும்.
அவர் ஒரு போதும் கட்சியைத் தவறாக வழிநடத்தவே மாட்டார் என்பதில் கூட் டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாக உள்ளனர்.
கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்பதெல்லாம் வெறும் வதந்திகளே. இன்று, நேற்று அல்ல 2004 ஆம் ஆண்டு முதலே, "இதோ கூட்டமைப்பு உடைந்து விட்டது....' என்றெல்லாம்  கட்டுக்கதை களைப் பரப்பி வருகிறார்கள்.
கூட்டமைப்பு உடைந்து விட வேண் டும் என்று பேரினவாதிகளும், தமிழின விரோதிகளும் பேரவாப்படுகின்றார்கள். நாம் இதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம்.
அரசியல் பேச்சுக்கான காலம் கனிந்து வருகின்ற நிலையில், இவ்வாறான விசமத் தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படு கின்றமை கவலை தருகிறது. ஆனால் தமி ழர்கள் இவ்வாறான பிரசாரங்களை நம்பி ஏமாறவோ, குழப்பம் அடையவோ தேவை இல்லை.  என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’