வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 ஜூன், 2010

ஜிம்பாப்வேயில் சுரண்டல் வைரம்


 

ஜிம்பாப்வேயின் வைரச் சுரங்கம் ஒன்று
ஜிம்பாப்வேயின் வைரச் சுரங்கம் ஒன்று
உலக வைர வணிகத்தை கட்டுப்படுத்தும் சர்வதேச திட்டமான கிம்பர்லே நடைமுறைகளில் இருந்து ஜிம்பாப்வேயை இடைநீக்க வேண்டும் என்று ஜிம்பாப்வேயின் வைரத் தொழிற்துறை குறித்து வந்திருக்கின்ற புதிய அறிக்கை ஒன்று அழைப்பு விடுக்கின்றது.
வைரங்களுக்கான சர்வதேச மட்டத்திலான தரச் சான்றிதழ்களை வழங்குவது கேபி என்று அழைக்கப்படுகின்ற இந்த கிம்பர்லே நடைமுறை திட்டந்தான்.
வைரச் சுரங்கங்களில் நடக்கும் வன்செயல்களையும், அங்கு வைரம் கடத்தப்படுவதையும் தடுக்க ஜிம்பாப்வே அரசாங்க நிர்வாகம் தவறிவருவதாக, இந்த அறிக்கையை தயாரித்த அரச சார்பற்ற நிறுவனமான குளோபல் விட்னஸ் என்னும் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.
அரசாங்கத்தினாலேயே இந்த வன்செயல்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும், இந்த சுரங்கங்களில் நடக்கும் சுரண்டல்களுடன் அரசாங்கக் கட்சியான ஸானு பி எஃப் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான் அன்னி டனேபெக் கூறுகிறார்.
கிழக்கு ஜிம்பாப்வேயில் உள்ள மரன்கி வைரச் சுரங்கத்தில் கடந்த மூன்று வருடங்களாக வைரம் அகழ்பவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் எதிராக அரசாங்கப் படையினரால் கடுமையான வன்செயல்கள் மேற்கொள்ளப்படுவதாக குளோபல் விட்னஸ் கூறுகிறது.
நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வன்செயல்களால் கொல்லப்பட்டதாகவும், பலர் இந்தச் சுரங்கங்களில் அடித்து பலவந்தமாக வேலை வாங்கப்படுவதாகவும் அது கூறுகிறது.
இவர்கள் பலவந்தமாக இராணுவம் மற்றும் பொலிஸாருக்காக சுரங்கத்தை அகழுமாறு பணிக்கப்படுவதாகவும் அது கூறுகிறது.
ஜிம்பாப்வேயின் பெரும்பாலான வைரச் சுரங்கங்கள் இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்ட கூட்டு முயற்சி நிறுவனங்களின் கடுப்பாட்டிலுமே இருப்பதாக குளோபல் விட்னஸ் கூறுகிறது.
இந்த கூட்டு முயற்சி நிறுவங்கள் நேரடியாகவே ஸானு பி எஃப் கட்சி மற்றும் இராணுவம் ஆகியவற்றின் முக்கியஸ்தர்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.
வைரச் சுரங்கத் தொழிற்துறை குறித்த நம்பிக்கைகள் மீண்டும் ஒரு முறை கேள்விக்குள்ளாகியிருப்பதால், ஜிம்பாப்வே 6 மாதங்களுக்காவது இந்த நடைமுறைகளில்  இருந்து இடைநீக்கி வைக்கப்படவேண்டும் என்று குளோபல் விட்னஸ் கூறுகிறது.
ஆனால், ஜிம்பாப்வே வைரங்களை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான குறைந்த பட்ச நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளதாக, கிம்பர்லே நடைமுறைகள் சார்பில் ஜிம்பாப்வேயை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஒருவர் கூறியுள்ளார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’