தொழில் வாய்ப்பு தேடிச் சென்ற நூற்றுக் கணக்கான இலங்கையர்கள் மலேசியாவில் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருந் தொகை பணம் செலுத்தி தொழில்நுட்ப வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மலேசியா சென்ற நூற்றுக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் தங்களை பதிவு செய்து கொண்ட முகவர் நிறுவனங்களின் ஊடாகவே குறித்த இலங்கையர்கள் மலேசியா சென்றுள்ளனர்.
எனினும் நிர்க்கதியான நிலையில் காணப்படும் குறித்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது முகவர் நிறுவனங்களோ நடவடிக்கை எடுக்கவில்லை என லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களை நாட்டுக்கு திருப்பு அனுப்பி வைக்க மலேசியாவிற்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் தலா 54000 ரூபாவினை கோரியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’