வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

மலையகப் பெண்களுக்கு நெருக்கடி


இலங்கையிலுள்ள மலையக தோட்டத் தொழிற்துறைகளில் பெண்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு முன்பு அவர்கள் கர்ப்பம் தரித்துள்ளார்களா எனும் சோதனை நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மலையகப் பகுதியில் பெண்களை தோட்ட நிர்வாகங்கள் வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் முன்னர் கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் குற்றம் சுமத்துகின்றார்.
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறைப்பாடொன்றை தான் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு இப்படியான மருத்துவ பரிசோதனை மேற் கொள்வது பெண்களின் அடிப்படை உரிமை மீறல் என தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் தனது புகாரில் தான் சுட்டிக் காட்டியுள்ளதாகவம் முரளி ரகுநாதன் தமிழோசையிடம் கூறினார்.
தோட்ட நிர்வாகங்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை இரு வார காலத்திற்குள் எடுப்பதாக ஆணைக் குழுவினர் பதிலளித்துள்ளாதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
முரளி ரகுநாதன்
முரளி ரகுநாதன்
தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் இது தொடர்பான முறைப்பாடு செய்வதற்கு முன்னதாக, இந்த விடயம் தொடர்பாக பல முறை தான் கொண்டு வந்தாலும், நிர்வாகத்தினர் அதை மறுத்துள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்.
இதன் காரணமாகவே தான் தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்
கர்ப்பம் தரித்தப் பெண்களை வேலைக்கு அமர்த்தினால் பிரசவத்தின் போது பல்வேறு கொடுப்பனவுகளை வழங்க நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டே இப்படியான வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’