வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 ஜூன், 2010

காந்தியின் வெண்கலச் சிலை கனடாவில் திறப்பு

வெண்கலத்தாலான மகாத்மா காந்தி சிலை கனடா நாட்டின் வின்னிபெக்கிலுள்ள மனித உரிமைக்கான அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இச்சிலையை, கனடாவுக்கான இந்திய தூதர் சசிசேகர் கவாய் திறந்து வைத்தார்.


அவர் அங்கு பேசுகையில்,

"காந்தியின் அகிம்சை நெறிகள், நீதி போதனைகள், உரை உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும். மனித உரிமைக்கான காந்தியின் சிந்தனை, நம்பிக்கை, ஈடு இணையற்றவை" என்று கூறினார்.
2004ஆம் ஆண்டில் இச்சிலையை இந்திய அரசாங்கம், கனடா அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக தந்தது. இச்சிலையைப் புகழ் பெற்ற சிலை வடிவமைப்பாளர் ராம் வாஞ்சி சுடோர் வடிவமைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், கனடா வாழ் இந்திய மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’