நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையே நாட்டுக்குத் தேவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"நாட்டில் தற்போது நிலவி வரும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையானது, மக்களின் நன்மைக்காகவன்றி, அரசாங்கத்தின் சொந்த நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனவேதான் நாட்டில் வாழும் பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பதோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்" என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’