வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 ஜூன், 2010

இந்திய மத்திய அரசு அனுமதி;பார்வதி அம்மாள் ஏற்றுக்கொள்வாரா?

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் அவரது மகளின் வீட்டில் தங்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் மற்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், பார்வதி அம்மாள் தமது மகளின் வீட்டில் தங்கலாம்.அத்தோடு நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் சந்திக்கலாம். ஆனால் அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினரை சந்திக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இது சம்பந்தமாக பார்வதி அம்மாளின் நிலை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பார்வதி அம்மாள் தமிழகத்தில் உள்ள மகளின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற விரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’