ஜெயபுரம் தேவன்குளத்தை புனரமைக்க வேண்டும் என ஜெயபுரம் பிரதேச மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து தேவன்குளத்தைப் பார்வையிடுவதற்காக ஜெயபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினருடன் சந்திரகுமார் அவர்கள் நேரில் சென்று புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிலைமைகளை நேற்றைய தினம் (16) ஆராய்ந்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தேவன்குளத்தைப் புனமைப்பதன் மூலம் 600 ஏக்கர் விவசாயச் செய்கையை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ஜெயபுரத்தில் உள்ள 350 குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் தொழில்களை வழங்கலாம் என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. அரசப்பன் தெரிவித்தார்.
கூடிய விரைவில் இக் குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதன் மூலம் மக்கள் மீண்டும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர்
சந்திரகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’