நாடு திரும்பிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது இந்திய விஐயத்தை சர்வதேசமெங்கும் பரப்புரை செய்ய உதவியிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றார்!.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய விஜயத்தினை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்கள் தலைமையிலான குழுவினருடன் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று மாலை 04.00 மணியளவில் நாடு திரும்பினார்.
நாடு திரும்பிய செயலாளர் நாயகம் அவர்கள் தமது இந்திய விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்றும், இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து மேலும் அதிகாரங்களை பெறுவதற்கு இந்திய அரசு முதற்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் வரை ஆதரவு தெரிவித்திருப்பது தமது நீண்ட கால கனவுகளுக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்றும் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்கள் அதை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தோடு இருப்பது மாபெரும் அங்கீகாரம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயத்தின் போது அரசியலுரிமை பிரச்சினை மட்டுமன்றி மேலும் பல பயனுள்ள விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமாக்கப்பட்டுள்தாகவும் இது குறித்து அனைத்து மக்கள் சமூகத்திற்கும் தெளிவாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது இந்திய விஐயத்தினை சர்வதேசமெங்கும் பரப்புரை செய்ய உதவியிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
சேறு வீசினால் அது தன் மீது விழும்போது சந்தணமாக மாறும் என்றும் கற்களை வீசினால் அது பூக்களாக விழுந்து மணம் வீசும் என்றும் தனது இந்திய விஐயத்தின் போது ஆற்றாக்கொடுமையில் கிளப்பி விடப்பட்ட புரளிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்ததோடு புயல் மழையை எதிர்கொண்ட தமக்கு இப்போது கிளப்பப்படும் புரளிகள் யாவும் புழுதி மழை என்றும் நாடு திரும்பிய அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’