வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 ஜூன், 2010

மட்டக்களப்பு தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

மட்டக்களப்பில் செயற்படும் ஆறு தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்றையதினம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் மட்டக்களப்பு வாழைச்சேனை ஏறாவூர் மொறக்கொட்டாஞ்சேனை மாங்காடு மற்றும் சீனித்தம்பி ஆகிய ஆறு தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தலைவர் எஸ்.சொலமன் செயலாளர் ரீ.துரைராஜா பொருளாளர் க.பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்குகொண்டதுடன் மட்டக்களப்பில் இயங்கும் சங்கங்கள் எதிர்நோக்கும் தேவைகள் மற்றும் கோரிக்கைகளையும் தெரியப்படுத்தினார்கள். குறிப்பாக சங்க உறுப்பினர்கள் தமது உழைப்பிற்கேற்ற பயனை பெற்றுக்கொள்ளும் முகமாக உரிய ஊதியத்தை வழங்கும் வகையில் மட்டக்களப்பு தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச்சங்கங்களே கள்ளுத் தவறணையினை வருடாந்த குத்தகைக்குப் பெற்று நடாத்த அனுமதி பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது பனை அபிவிருத்தி சபைத்தலைவர் பசுபதி சீவரட்ணம் அவர்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’