ஆயுதங்களை விநியோகிப்பதன் மூலம் இலங்கைக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த இந்தியா முனைப்புக் காட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் சிறுபான்மையின அரசியல் கட்சிகளுடன் தேசிய பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.ஏன் சிறுபான்மையின அரசியல் கட்சிகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கேள்வியெழுப்பிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி கூட சிறுபான்மையினத்தவரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி எனவும் தெரிவித்தார்.
தேர்தலின்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்கு வாக்களித்திருந்த நிலையில், தாம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகக் காரணம் அவர்களே எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். இந்நிலையில், இலங்கைக்கு விநியோக்கிப்ப்ட்ட அனைத்து ஆயுதங்களுக்கும் உரிமப் பத்திரம் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’