வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 ஜூன், 2010

புலி சந்தேக நபர்கள் ஆஸ்திரேலியா பயணம்;இலங்கை எச்சரிக்கை

Australia Flag clipart animatedசட்டவிரோதமாக படகொன்றில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் பயணித்திருப்பது தொடர்பில் ஆஸ்திரேலியாவுக்கு, இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இவ்வாறு படகொன்றில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்திருப்பது தொடர்பில் தனக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வலகம்பய குறிப்பிட்டார்.
'சன் சீ' என்ற படகில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் சென்றிருந்ததாக தகவல் கிடைத்திருந்த போதிலும், எந்த நாட்டுக் கொடியுடன் குறித்த படகு பயணித்திருந்தது என்பது தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஆஸ்திரேலியாவுக்கு தாம் அறிவித்திருப்பதாகவும் சேனக வலகம்பய தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பில் தமக்கு எந்தவித தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என கடற்படைப் பேச்சாளர் அத்துல செனவிரத்ன தெரிவித்தார்.
படகொன்றில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் கனடாவை நோக்கி பயணித்திருப்பதாகவும், பின்னர் குறித்த படகு ஆஸ்திரேலியாவை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் ஆஸ்திரேலிய ஊடகமொன்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’