வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பதில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உரையாற்றிக்கொண்டிருந்தார். மாலை 4 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுந்து இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒன் றுமே இல்லையெனக் கூச்சலிட்டார். இதை அடுத்து ஐ.தே.கட்சி எம்.பிக்கள் சுலோ கங்களை கோஷித்தவாறு சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.அரச எம்.பிக்கள் பதிலுக்கு கூச்சலிட ஆரம்பித்தனர். இந்தக் களேபரம் சுமார் ஐந்து நிமிடம் நீடித்தது. 4.05 மணிக்கு அமைச்சர் வரவுசெலவுத் திட்ட உரையை முடித்துக்கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நேற்று பதில் நிதி அமைச்சர் சரத் அமுனுகமவால் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வருடத்தின் அரை ஆண்டில் இந்த வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோதிலும் இது முழு ஆண்டுக்குமே உரியது என்று சரத் அமுனுகம அவரது வரவுசெலவுத் திட்ட உரையில் கூறினார்.
வரவுசெலவுத் திட்டத்தையும் சமர்ப்பிக்கும் பொருட்டு நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு கூடியது.
வழமையாகக் கொண்டுவரும் வரவுசெலவுத்திட்டம் அடங்கிய பெட்டி இல்லாமல் ஒரு சில "பைல்' களுடன் மட்டுமே சபைக்குள் நுழைந்த அமைச்சர் சரத் அமுனுகம, 2.05 மணியளவில் வரவுசெலவுத்திட்ட உரையை ஆரம்பித்து 4.05 மணியளவில் நிறைவு செய்தார்.
வழமையான வரவுசெலவுத் திட்டத்தைவிட இம்முறை வரவுசெலவுத்திட்டம் மிகவும் சுருக்கமாகவே அமைந்திருந்தது. வழமையாக வரவுசெலவுத் திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும். அதில் முதல் பிரிவு வரவுசெலவுத் திட்ட உரையையும், இரண்டாவது பிரிவு முன்மொழிவுகளையும் கொண்டிருக்கும். இம்முறை இரண்டு பிரிவுகளும் ஒன்றாகவே இருந்தன.
அதாவது, வரவுசெலவுத்திட்ட உரையிலேயே முன்மொழிவுகளும் சுருக்கமாக அடங்கியிருந்தன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’