கனடாவின் குடியுரிமையானது பயணத்திற்கான கடவுச்சீட்டைப் பெறுவதற்கான ஒன்றல்ல எனவும் அது மிகவும் கனதியான பெறுமதியை உடைய ஒரு தகுதி எனவும் தெரிவித்த கனடியக் குடிவரவு அமைச்சர் அதற்கான சட்டத்தில் பாரிய திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார்.இச்சட்டம் இலங்கைத் தமிழர்களில் பலரைப் பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இவ்வகையான சட்டங்களின் மூலம் தண்டனை பெறும் முதலாவது நபராக இலங்கைத் தமிழர் ஒருவரே திகழ்கின்றார்.
குறிப்பாக கனடியப் பிராஜவுரிமை பெற்ற ஒருவர் ஒரு குற்றச்செயலில் ஈடுபடும் தருணத்தில் அவரது குடியுரிமையை மீளப் பெறுவதைத் தீர்மானிக்கும் பொறுப்பை அரசியல் மேல்நிலையாளர்களின் பரிசீலனைக்கே இதுவரை விடப்பட்டிருந்தது.
ஆனால் இனிவரும் காலங்களில் கனடாவில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் குடியுரிமையை மீளப்பெறும் செயலை நீதிமன்றங்களே தீர்மானிக்கும் என சட்டத் திருத்தத்தின் மூலம் நீதிமன்றுகளிற்கு மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நபரான ஜோதிரவி சிற்றம்பலம் கனடாவில் குழு வன்முறையில் ஈடுபட்டவர் என்ற வகையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். எனினும் அவரை இந்த மாதம் 10ம் தேதி இலங்கைக்கு நாடு கடத்திய கனடிய அரசு அது பற்றிய ஒப்புதலை இன்றே அறிவித்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கனடிய குடிவரவு மந்திரி யேசன் கென்னி “திரு சிற்றம்பலம் போன்ற குற்றவாளிகள் கனடாவில் வாழுவதற்கு அனுமதிக்க முடியாத நபர்கள் என்ற வகையில் அவர்களைத் திருப்பியனுப்புவதே கனடாவின் இறைமைக்கும் அதன் குடிவரவு குடியகல்வுச் சட்டங்களிற்கும் இயல்பான ஒன்றெனவும், அதுவே கனடாவை சட்டதிட்டங்களிற்கு அமைய வழிநடத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சாராலேயே குடிவரவாளர்களை இறுக்கும் சட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்ட போதிலும், இப்போது கனடியப் பிரஜாவுரிமை பெற்றவர்களின் மீதே பாயும் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் பல இலங்கைத் தமிழர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கும் நிலையை உருவாக்கியுள்ளார்.
குறிப்பாக பயங்கரவாதம் சம்பந்தமான தொடர்புகள், குற்றச் செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றைக் காரணமாக வைத்து கனடியப் பிராஜாவுரிமை ஒருவரிடமிருந்து மீளப்பெறப்படுமிடத்து மேற்படி நபர் கனடாவிலேயே ஏதுமற்ற நாதியாக ஆக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.
அத்தோடு பிரஜாவுரிமை பெறுவதற்கு முன்னர் இத்தகைய சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர் எனக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு பிராஜவுரிமை வழங்குவதையும் இச்சட்டத்தின் மூலம் கனடிய அரசால் கட்டுப்படுத்த முடியும்.
தொடர்புபட்ட செய்தி
ஏ கே கண்ணன் குழு தலைவர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்
கனடா ரொறன்டோ நகரில் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஜோதிரவி சிற்றம்பலம் எனப்படும் இவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவர்,கடந்த 10 ஆம் திகதி, கனடா எல்லையோர படையினரின் காவலுடன் இலங்கைக்கு திருப்பியனுப்பப் பட்டதாக பைனான்ஸியல் போஸ்ட் தெரிவித்துள்ளது. எனினும் நேற்றைய தினமே கனேடிய அரசாங்கம் இ;ந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
கனடாவில், இயங்கும் ஏ கே கண்ணன் எனப்படும் கோஷ்டியினரின் தலைவராக செயற்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இவருடைய குழு, கொலை கொள்ளை, போதைப்பொருள் வியாபாரம், உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தக்குழுவின் நடவடிக்கைகள்,கனேடிய இறைமையை பாதிக்கும் வகையில் அமைந்திருந்ததாக கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட இவரை இலங்கைக்கு நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் 2007 ஆம் ஆண்டு அவர், இலத்திரனியல் கண்காணிப்புடன் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில், தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்குகளை அடுத்தே ஜோதிரவி சிற்றம்பலம் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’