ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் ரஷ்ய அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை அல்லது பொதுச் சபை இலங்கையுடன் ஆலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் ரஷ்ய அரசாங்கம் தெரிவித்தது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார்.
இந்நிலையில், மேற்படி நிபுணர்கள் குழுவானது விடுதலைப் புலிகளுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் என்பது தொடர்பிலும் தமது நாடு கவனத்திற்கொண்டிருப்பதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்தது.
தேசிய அடிப்படையில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்திருக்கும் விசாரணை நடவடிக்களை தமது நாடு கவனத்திற் கொண்டிருப்பதாகவும் ரஷ்ய அரசாங்கம் குறிப்பிட்டது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’