வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 5 ஜூன், 2010

கம்பன் கண்ட காப்பிய நாயகன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுன்னாகத்தில் இடம்பெற்ற மாபெரும் வரவேற்புரையில் தலைவர் உரை.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்றையதினம் வலிகாமம் தெற்கு சுன்னாகம் பிரதேச மக்களினால் மாபெரும் வரவேற்பு விழா நடாத்தப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) 
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்றையதினம் வலிகாமம் தெற்கு சுன்னாகம் பிரதேச மக்களினால் மாபெரும் வரவேற்பு விழா நடாத்தப்பட்டுள்ளது.

 
வலிகாமம் தெற்கு பொதுமக்களினாலும் பொது அமைப்புக்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி மாபெரும் வரவேற்பு விழாவானது சுன்னாகம் ஐயனார் மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது. முன்னதாக சுன்னாகம் நகரை வந்தடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். சுன்னாகம் ஸ்கந்தவரோதய மாணவர்களின் பாண்ட் அணிவகுப்பு மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க அமைச்சரவர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவ்வேளை வழிநெடுகிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் இல்லங்களில் பூரணகும்ப மரியாதை செலுத்தப்பட்டதுடன் மலர்மாலைகள் மற்றும் பொன்னாடைகளும் அமைச்சர் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டன.
 
ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு சுன்னாகம் ஐயனார் தேவஸ்தானத்தில் விசேட ஆசிவழங்கும் நிகழ்வு ஆலய பிரதம பூசகர் கந்தசாமிக் குருக்கள் மற்றும் வாமதேவன் குருக்கள் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டதுடன் பூஜை வழிபாடுகளும் அங்கு இடம்பெற்றன. இதனைத்தொடர்ந்து ஐயனார் பொதுமண்டபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியரும் அரசாங்க மத்தியஸ்தருமான ஐயாத்துரை இராமசாமி மாஸ்டரின்  தலைமையில் மாபெரும் வரவேற்பு விழா ஆரம்பமானது. சுன்னாகம் வரியப்புலம் மாரியம்மன் தேவஸ்தான பிரதமகுரு சிவப்பிரம்மசிறி கணேச சபாபதிக்குருக்கள் அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இவ்விழாவில் வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் வலிகாமம் தெற்கு பிரதேச சபைச் செயலாளர் திருமதி சுலோச்சனா முருகேசன் யாழ். மாநகரமுதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சுன்னாகம் ப.நோ.கூ.சங்கத் தலைவர் சி.குமாரவேல் சுன்னாகம் வர்த்தக சங்க உப தலைவர் ந.அரசரத்தினம் வலிகாமம் பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தலைவர் க.மெய்யழகன் ஓய்வுபெற்ற அதிபர் நா.சிதம்பரலிங்கம் ஓய்வுபெற்ற உதவித்திட்டப் பணிப்பாளர் த.தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.

நிகழ்விற்கு தலைமைதாங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியரும் அரசாங்க மத்தியஸ்தருமான ஐயாத்துரை இராமசாமி மாஸ்டர் உரையாற்றுகையில் கம்பன் கண்ட காப்பிய நாயகன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதான் என புகழாரம் சூட்டினார்.
 
சுன்னாகம் பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட இம்மாபெரும் வரவேற்பு விழாவின் நிறைவாக உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏறக்குறைய நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் இப்பகுதியில் மக்களுடனும் உறவுகளுடனும் அளவளாவுவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள தமது பூர்வீக இல்லத்தை பிரபல தொழிற்சங்க வாதியும் தனது வளர்ப்புத் தந்தையுமாகிய கே.சி.நித்தியானந்தா அவர்களின் பெயரில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட சிறார்களின் பராமரிப்பு இல்லமாக அமைக்கப்போவதாகவும் இதற்கு புலம்பெயர்ந்த கருணையுள்ளங்கள் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இன்றைய வரவேற்பு விழாவில் வலி தெற்கு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் சற்குணம் தீபன் அவர்கள் நன்றியுரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’