வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 ஜூன், 2010

வலைப்பாடு கடற்றொழிலாளர்களின் நிலைமைகள் தொடர்பாக பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் நேரில் ஆராய்வு!


கிளிநொச்சி வலைப்பாடு பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் நேரில் கண்டறிவதற்காக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் விடுத்திருந்த அழைப்பை ஏற்று நேற்று (16) வலைப்பாடு மீன்பிடி இறங்குதுறைப் பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் விஜயம் செய்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அங்கு மீனவர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் கண்டறிந்தார் நாடாளுமன்ற உறுப்பினர்.
மீனைப் பழுதடையாமற் பாதுகாப்பதற்கான ஐஸைப் பெற்றுக் கொள்வதில் தாம் தொடர்ந்தும் நெருக்கடிகளைச் சந்திப்பதாகத் தெரிவித்த மீனவர்கள் மன்னார்ப் பகுதியில் இருந்து ஐஸைப் பெற்றே பாவிப்பதாகத் தெரிவித்தனர். இதனால் சில வேளைகளில் தாம் பெரும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களிடம் சுட்டிக் காட்டினர்.
எனவே தமக்கான ஐஸைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் பூநகரிப் பிரதேசத்தில் ஒரு ஐஸ் தொழிற்சாலையை அமைத்துத் தரும்படி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் வலைப்பாட்டுக் கடற்பகுதியில் இறால் வளர்ப்பு அட்டை வளர்ப்புப் பகுதிகளையும் திரு. சந்திரகுமார் அவர்கள் பார்வையிட்டார். இக் கடல் உணவு வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் மீனவர்களிடம் உறுதியளித்துள்ளார்




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’