வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 ஜூன், 2010

டக்ளஸ் விவகாரம்; இந்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு பா.ஜ.க. கட்சி கண்டனம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என தெளிவாகத் தெரிந்தும் தீர்ப்பு வரட்டும், பார்க்கலாம் என்று இந்தியவின் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது, கண்டனத்துக்குரியது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில், தமிழர் ஒருவரை சுட்டுக் கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா, மத்திய அரசால் தப்பிக்க வைத்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா பற்றிய தகவல் புது டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸ்மா அதிபர் கூறியுள்ள நிலையில் அவர் தங்களுக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது கணடனத்துக்குரிய விடயமாகும்.
டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அவருடன் பிரதமர் மன்மோகன் சிங் கை குலுக்கியுள்ளார். அவர் கொழும்புக்கு திரும்பிச் சென்றுள்ளது, ஒரு குற்றவாளியை தப்பிக்க வைக்கும் மத்திய அரசின் உள்நோக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது.
தமிழர்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போயிருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’