யாழ். நகரிலிருந்து பூநகரிக்கு படகுச் சேவையினை ஆரம்பிக்கும் முகமாக பூர்வாங்க திட்ட நடவடிக்கைகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களாலும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களாலும் இன்றையதினம் ஆராயப்பட்டன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ். நகரிலிருந்து பூநகரிக்கு படகுச் சேவையினை ஆரம்பிக்கும் முகமாக பூர்வாங்க திட்ட நடவடிக்கைகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களாலும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களாலும் இன்றையதினம் ஆராயப்பட்டன.இத்திட்டம் தொடர்பாக இன்று காலை கொழும்புத்துறை மணியந்தோட்டம் குருநகர் ஆகிய இறங்குதுறைகளைப் பார்வையிட்டதுடன் அவர்கள் இது தொடர்பாக சாதக பாதக நிலைமைகளையும் ஆராய்ந்தனர். பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அதிக வசதி உடையதாகவும் அதேசமயம் யாழ். கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத வகையிலும் மேற்படி பயணத் திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அமைச்சராலும் ஆளுநரினாலும் திட்டங்கள் ஆராயப்பட்டன. இன்றையதினம் யாழ் கரையோர இறங்குதுறைகளை அமைச்சரும் ஆளுநரும் பார்வையிட்ட சமயம் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் வடமாகாண நிர்வாகச் செயலாளர் ரி.இராசநாயம் ஆகியோரும் உடனிருந்தனர்.
மேற்படி கடல்வழி போக்குவரத்து ஆரம்பமாகும் பட்சத்தில் குறுகிய நேரத்தில் யாழ்நகரிலிருந்து மண்ணித்தலை ஊடாக பூநகரியை சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’