வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 ஜூன், 2010

உங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள்: ததேகூவுக்கு எச்சரிக்கை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக் கூடாது என ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹெல உறுமய கட்சி இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது கலந்து கொண்டிருந்த அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தேரர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் கொள்கைகளை முன்வைத்து அவர்களின் நிழலாக செயற்பட எண்ணக் கூடாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொடுத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தை விடுத்து, பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும்.
அதனைத் தவிர்ப்பார்களானால் தமிழ் மக்களே அதில் பெரிதும் பாதிப்பினை எதிர்நோக்குவதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்றார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’