வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 ஜூன், 2010

தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை-கருணாநிதி

இலங்கை வாழ் தமிழ் மக்கள் சொல்ல முடியாதளவு துன்பங்களை அனுபவித்து வருவதாக திராவிட முன்னேற்ற கழக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கோவையில் இடம்பெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இன்று மாலை தமிழக முதல்வர் மு.கருணாநிதி நிறைவு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இங்கு உரையாற்றிய அவர்,
எல்லா மக்களும் ஏற்கக்கூடிய தீர்வொன்றை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகதிகளாக்கப்பட்ட மக்கள் வீடு திரும்ப முடியாமல் தொடர்ந்தும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.அகதி முகாம்களில் இருந்து திரும்பி சென்றவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட படி பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
மேலும், அந்தந்தக்காலங்களில் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டதே ஒழிய, இதுவரைக்கும் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு அடையாளம் காணப்படவில்லை எனவும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி குறிப்பிட்டார்.
இந்த நிலமை மாநாட்டில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு வேதனையையும் ஆழ்ந்த அவதானிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’