பிரசித்தி பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் வெளியிடத்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து மேற்படி ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியூடாகவும், வவுனியாவிலிருந்து செல்லும் பக்தர்கள் புளியங்குளம் நெடுங்கேணி வீதியூடாகவும் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.
இன்று ஆரம்பமான ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’