வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டில் இலங்கையனாக பங்கேற்பதில் பெருமையடைகிறேன் - ஹக்கீம்

தமிழக முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஓர் இலங்கையனாக பங்கேற்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் தெரிவித்தார்.
கோவையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொது அரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹக்கீம் வீரகேசரி இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் எமக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு விமரிசையாக கோவையில் நடைபெறுகின்ற இச்சந்தர்ப்பத்திலே தமிழக அரசின் அழைப்பினை ஏற்று இங்கு பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். அதிலும் வந்தாரை வரவேற்று வாழவைக்கும் கோவை மாநகரிலே இந்த மாநாடு நடைபெறுகின்றது. அதனால் சந்தோசமடைகிறேன்.
எந்த பேதங்களுமின்றி தமிழ்பேசும் முஸ்லிம்களாகிய எம்மையும் மதித்து இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
விழாக்கோலம் பூண்டிருக்கும் கோயம்புத்தூரில் தொடர்ந்தும் தங்கியிருந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்ப்பதற்குக் காத்திருக்கிறோம் என்றார்.
இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பஷிர் சேகுதாவுத், ஹசன் அலி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’