வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 ஜூன், 2010

விசா மோசடி - 7 இந்தியர்கள் கைது

சுற்றுலா விசாவுடன் நாட்டிற்குள் பிரவேசித்தபின்னர் வத்தளையிலுள்ள பித்தளைத் தொழிற்சாலையொன்றில் தொழில் புரிந்துவந்த 7 இந்தியப் பிரஜைகளைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரை  சட்ட விரோதமாகத் தொழில்களில் ஈடுபட்ட 105 இந்தியப் பிரஜைகள்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் விசாரணை மற்றும் விமான நிலையப் பிரிவிற்குப் பொறுப்பான உதவிக் கட்டுப்பாட்டாளர் வில்லியம் தேவேந்திரராஜா தெரிவித்தார்.
சுற்றுலா விசாவுடன் நாட்டுக்குள் வந்து சட்ட விரோதமாகத் தொழில்களில் ஈடுபட்ட மொத்தம் 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் சொன்னார்.
கைது செய்யப்படும் வெளிநாட்டவர்களை மிரிஹான குடிவரவு - குடியகல்வுத் தடுப்பு முகாமில் தடுத்து வைத்து நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’