வன்னி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் நீண்டகால இடைவெளியின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட இணைப்புக்குழுவின் கூட்டம் நேற் றுக் காலை 9.30 மணிமுதல் 2 மணிவரை முல்லைத்தீவு செயலகத்தில் நடைபெற்றது.வன்னி மாவட்ட இணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரே கலந்து கொண்ட கூட்டமைப்பு உறுப்பினராவார்.
மக்களின் மீள் குடியமர்வுடன் தொடர்பு டைய அதிகாரிகள், திணைக்களத் தலை வர்களும் கூட்டத்தில் பங்குபற்றினர்.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற நாடா ளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசால் நியமிக்கப்பட்ட இணைத் தலைவர்களின் கீழ் இடம்பெறும் முதலாவது கூட்டம் இது வாகும்.
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்த லின் பின் இணைப்புக்குழுக் கூட்டங்கள் இடையிடையே இடம்பெற்ற போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக் கள் அக் கூட்டங்களைப் புறக்கணித்து வந்தனர்.
நேற்று நடந்த முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப் பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்தனர்.
அங்கு ஆராயப்பட்ட மற்றும் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் வருமாறு:
* முள்ளிவாய்க்கால் பகுதியில் பொது மக்களால் கைவிடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள், தெளிகருவிகள், டிராக்டர் கள், லான்ட்மாஸ்டர்கள், வள்ளங்கள் ஆகிய வற்றை மக்களுக்கு மீள்வளங்க வசதியாக அரச அதிபரிடம் கையளிக்குமாறு கூட்ட மைப்பினர் கேட்டுக்கொண்டனர். விரை வாக அவற்றை அரச அதிபரிடம் கைய ளிக்க ஏற்பாடு செய்வதாக ஆளுநர் தெரி வித்தார்.
* கடந்தகால போர் நிலைமை காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மல்லாவி, மடு, வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளில் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர் களாகப் பணியாற்றி வருபவர்கள் நிரந்திர மாக்கப்படவில்லை. அவர்கள் நிரந்தரமாக் கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
*பிரஸ்தாபத் தொண்டர் ஆசிரியர் களுக்கு நேர்முகப்பரீட்சை நடத்தி நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவைப் பத் திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று ஆளு நர் தெரிவித்தார்.
* நெற்செய்கையில் ஈடுபடுபவர் களுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையை ஆளுநர் ஏற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
* மீளக்குடியமர்ந்த மக்களுக்கு 50 வீத மானியத்துக்கு வழங்கப்படும் கோழிக் குஞ்சுகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யவேண்டுமெனக் கூட்டமைப்பினர் கோரினர். இலவசமாக வழங்க ஏற்பாடு செய்வதாக ஆளுநர் உறுதி கூறினார்.
* மீளக்குடியமர்ந்தோர் தமது காணி தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து உறுதிகளைப் பெற காணிக் கச்சேரி நடத்த வேண்டும் என்று கூட்டமைப்பினர் முன் வைத்த கோரிக்கையையும் ஆளுநர் ஏற் றுக்கொண்டார்.
* பாடசாலைகளில் நிலைகொண் டுள்ள படையினரை விலக்கி பாடசாலை கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டு என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
* வன்னியிலுள்ள வைத்தியசாலை களில் நிலவும் டாக்டர்கள், தாதிகள் பற் றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பினர் கோரினர். புதிதா கப் பயிற்சிபெற்று வெளி யேறும் டாக்டர் கள், தாதிகளை நியமிக்க ஏற்பாடு செய்வ தாக ஆளுநர் உறுதிகூறினார்.
* கூட்டுறவுச் சங்கங்களில் பொதுமக்கள் வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெற ஏற்பாடு செய்யுமாறு விடுத்த கோரிக்கை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளு நர் பதில் அளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’