ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் |
உலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு படமாகவே கருதப்படுகிறது.
ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய அந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்தது.சைக்கோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஹிட்ச்காக் தனது நகைச்சுவை மற்றும் திகிலூட்டும் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார்.
ஆனால் சைக்கோ திரைப்படம் அவரை மற்றொரு உலகுக்கு, பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றது. சினிமா ரசிகர்களை உலுக்கிக் கலக்கிய ஒரு உலகுக்கு அழைத்து சென்றவர் ஹிட்ச்காக்.
சைக்கோ படத்தில் ஜெனட் லே |
சைக்கோ திரைப்படம் வெளியான 1960 ஆம் ஆண்டு ஹிட்ச்காக்குக்கு வயது 60. ஹாலிவுட்டின் புகழ் உச்சியில் அவர் இருந்த காலகட்டம் அது.
அந்தப் படம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படம் ஒரு சாதாரண கதையை அடிப்படையாக வைத்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஒன்றாகும்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு பெண்மணி பணத்தை திருடிவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். பின்னர் அதற்கான விலையையும் அவர் கொடுக்க வேண்டியதாகிறது.
ஹிட்ச்காக்கும் ஜெனட் லேயும் |
பேசாப் படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஹிட்ச்காக் நல்ல ஒசைகளை ஆராதிக்கும் குணம் கொண்டவராக இருந்தார். மேலும் அருமையான இசை அமைப்பாளரான பெர்ணாண்ட் ஹெர்மானை அவர் பணிக்கு அமர்த்திக் கொண்டார்.
தனது ரசிகர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்று அவர் உணர்ந்திருந்தார். அதுவும் குறிப்பாக அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ரசிகர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் ஹிட்ச்காக் நிபுணராக இருந்தார்.
அந்த சமயத்தில் அவர்களின் உணர்வலைகளுடன் எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதில் அவர் வல்லவராக இருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’