வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 ஜூன், 2010

யாழ் மாநகர அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் யாழ் மாநகர அபிவிருத்தி திட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுதலுக்கேற்ப ஜனாதிபதியினால் 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர முதல்வரின் தலைமையில் அவரது வழிகாட்டலுடன் மாநகர பிரதேசத்தில் 23 வட்டாரங்களும் 9 கொத்தணிகளாகப் பிரிக்கப்பட்டு மக்கள் பங்கேற்புடன் குறித்த கொத்தணிகளுக்கான பிரச்சினைகள் இனங்காணப்பட்டு திட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகின்றன.
எனவே மக்கள் பங்கேற்புடனான சமூக அபிவிருத்தித் திட்டத்தினை சிறந்த முறையில் தயாரிக்க அங்கத்தவர்கள் யாழ் மாநகர உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் நேரிய சிந்தனையுடன் இவ் அபிவிருத்திப் பணியில் இணைந்து கொள்ளுமாறு யாழ் மாநகர முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’