வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 ஜூன், 2010

ரூ.100 கோடி நஷ்டம் : அதிர்ச்சியில் ரிலையன்ஸ்…!

கைட்ஸ், ராவணன் என அடுத்தடுத்து இரு பெரிய படங்களின் வீழ்ச்சி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ 100 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிச்சயம் இவ்வளவு பெரிய அடியை எதிர்ப்பார்த்திருக்காது என்பதுதான் பாலிவுட் முழுக்க பேசப்படும் விஷயமாக உள்ளது. ஹ்ரித்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானது. ஆரம்பத்தில் ரூ 54 கோடிக்கு இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்கப் பேசி வந்தது ரிலையன்ஸ். ஆனால் படம் குறித்த எதிர்மறை செய்திகள் பரவியதும் ரூ 40 கோடி மட்டுமே கிடைத்தது. கைட்ஸ் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 60 கோடி எனக் கூறப்படுகிறது.
பிக் பிக்ஸர்ஸ் அடுத்து மெட்ராஸ் டாக்கீஸுடன் கூட்டாக மூன்று மொழிகளில் தயாரித்துள்ள ராவணன் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தயாரிப்புச் செலவு ரூ 100 கோடி என்று கணக்கு காட்டியுள்ளனர். மூன்று மொழிகளிலும் சேர்த்து ராவணன் வசூல் ரூ 53 கோடி என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது ரூ 40 கோடி வரை நஷ்டம் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பெரும் நஷ்டங்கள் மூலம் அதிர்ச்சியடைந்துள்ள ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ், தனது அடுத்தடுத்த படத் தயாரிப்புகளை தள்ளிப் போட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் இந்தியா எக்ஸிகியூடிவ் எடிட்டர் வஸீர் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’