வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 மே, 2010

ஹட்டன் நகரத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கருக்கலைப்பு நிலையம் பொலிசாரால் முற்றுகை


ஹட்டன் நகரத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கருக்கலைப்பு நிலையத்தை பொலிசார் முற்றுகை இட்டனர்.அங்கு கடமை புரிந்த போலி டாக்டரும் போலி தாதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவக்கப் படுகின்றது.
டிக்கோயாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி இன்னிலையத்தில் மேற்கொண்ட கருக்கலைப்பை அடுத்து அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு டிக்கோயா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே பொலிசார் இம் முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோத கருக்கலைப்பிற்குப் பாவித்ததாகக் கருதப் படும் கருவிகளையும் பொலீஸார் கைப்பற்றி உள்ளனர்.இதுதொடர்பான வைத்திய அறிக்கை கிடைத்ததும் சந்தேக நபர்களை மாஜிஸ்திரேட் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’