முல்லைத்தீவு இறுதிச் சமரின் போது வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சரத் பொன்சேகா நேர்காணல் அளித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடவில்லை என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
போரின் இறுதிக் காலப்பகுதியில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.ஜே.ஆர். ஜயவர்த்தன இந்த நாட்டில் உருவான மிகச் சிறந்த தலைவர் எனவும் அவரது ஆளுமை வியந்து பாராட்டத்தக்கதெனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பலவீனமான எதிர்க்கட்சியொன்றை ஜே.ஆர். மாபெரும் வெற்றிக் கட்சியாக மாற்றினார்.
எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு எவ்வாறு அவர் அரசாங்கத்தை கைப்பற்றினார் என்பது தொடர்பிலான புத்தகமொன்றை தற்போது வாசித்து வருவதாக ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’