வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 மே, 2010

பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடு : மஹிந்த பாலசூரிய

நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழியில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யப்படும். இவர்களுக்கான பயிற்சி யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் களுத்துறை ஆகிய நகரங்களில் நடத்தப்படும் எனப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்யக் கூடிய வகையில் கடமையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் மொழியை எழுதவும் பேசவும் கூடிய அதிகாரிகளின் தட்டுப்பாட்டை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் களுத்துறை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சி நிலையங்களில் ஆறு மாத கால தமிழ் மொழிப் பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’