பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்குவதில் உள்ள முக்கியமான தடங்கல் என்பது நம்பிக்கைக் குறைவுதான் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஆயினும், இந்தியா எல்லா எஞ்சியிருக்கும் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மன்மோகன் சிங் கூறினார்.இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில் திங்களன்று புது தில்லியில் செய்தியாளர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்திருந்தார். அவர் மிகவும் அரிதாகவே செய்தியாளர்களைச் சந்திக்கும் வழக்கம் கொண்டவர்.
பாகிஸ்தான் பதில்
மன்மோகன் சிங்கின் இந்தக் கருத்துகள் ஒரு சாதகமான திருப்பம் என்று கூறிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ஆனால், பரஸ்பரம் நம்பிக்கைப் குறைந்துள்ளது என்பதில் சந்தேகமேயில்லை என்றும் கூறியிருக்கிறது.
மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் இருநாடுகளிடையே நடந்துவந்த பேச்சுவார்த்தைகள் முறிந்திருந்தன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’