வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 25 மே, 2010

நாட்டில் சமாதானம் நிலவ கேபி உதவுவார் : பேராசிரியர் ரொஹான்


நாட்டில் யுத்தம் நிறைவடைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து சமாதானம் நிலவுவதற்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவு முகவராக செயற்பட்ட, கேபி (குமரன் பத்மநாதன்) உதவத் தயாராக இருப்பதாகப் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.
இலங்கை மற்றும் உலகத் தமிழர்களுக்கு இடையே உறவுப் பாலம் ஒன்றை அவர் ஏற்படுத்தி வருவதாகவும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

"நாடு கடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்குப் பணிப்புரை வழங்கி விட்டு, இலங்கை அரசிடம் சரணாகதியடைந்தவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.
இவர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான - காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி. பணியாற்றுகின்றார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார். வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது. அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்?
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுதும், அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளும், போராளிகளும் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதன் பின்னணியில் முதன்மையான பாத்திரத்தை வகித்தவர் கே.பி.
வெளிநாடுகளிலும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை இவர் ஏற்படுத்தியிருந்த நிலையில், ரொஹான் குணரட்னவின் ஊடகச் செவ்வி கடந்த ஓராண்டாக தமிழீழ மக்களிடையே நிலவிய சந்தேகங்களை உண்மையாக்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’