வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 மே, 2010

நாடாளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்தும் பங்கேற்க சரத்துக்கு அனுமதி

இன்றைய தினம் நடைபெறவிருந்த இராணுவ விசாரணைக்குச் செல்லாமல் ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்வதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

இத்தகவலை ஜனநாயக தேசிய முன்னணியின் ஊடகப்பிரிவு சற்று முன்னர் எமது  இணையத் தளத்துக்குத் தெரிவித்தது.
நாடாளுமன்ற அமர்வுகளில் தான் பங்கேற்கவிருக்கும் நேரத்தில், விசாரணைக்கென அழைக்கப்பட்டிருப்பது தொடர்பில் சபாநாயகரிடம் ஜெனரல் சரத் பொன்சேகா முறையிட்டதையடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
ஏழாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின.
அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தன்னை பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் விசாரணைக்கென அழைத்திருப்பதாகவும் இது நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறும் செயலாகும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’