வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 மே, 2010

கறுப்பு வேனில் கடத்தப்பட்ட மாணவி தப்பி வந்தார் : மட்டக்களப்பில் பரபரப்பு

இன்றுகாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் தப்பிவந்துள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களுதாவளை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விபயிலும் பா.நிரஞ்சலா என்ற மாணவியை பாடசாலை முன்றலில் கறுப்பு வேனில் வந்த இனந்தெரியாத நபர்கள் இன்று காலை கடத்திச் சென்றுள்ளனர்.

அவரை மறைமுகமான இடமொன்றில் தடுத்து வைக்க முற்பட்ட வேளை, அந்த மாணவி அங்கிருந்து தப்பி, எருவில் கண்ணகி வித்தியாலயத்திற்குச் சென்று பாடசாலை அதிபர் கைலாசபிள்ளையிடம் சம்பவத்தை விபரித்துள்ளார்.
பாடசாலை அதிபர் அந்த மாணவியுடன் சென்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் கடத்திச் செல்லப்பட்ட வேளை, தன்னைப் போன்று ஆறு மாணவியர் மயக்கமான நிலையில் அங்கிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவலை மேற்படி மாணவி வெளியிட்டுள்ளார்.
இந்தத் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் எமது  இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.
அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் இதற்கு உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவும் பா. அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார்.
களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’