கனடா வானொலியில் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா புதிதாக எதைத்தான் சொல்லி விட்டார்?...
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது எமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு! அதை புலிகளின் தலைமை தங்களது சுயலாபங்களுக்காக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அதை நடைமுறைப்படுத்தியவர்கள் சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை.
இதைத்தானே சொன்னார். இந்த கருத்து சரியானது அல்லது தவறானது என்ற விவாதங்களுக்கு அப்பால் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீண்ட காலமாகவே இதை உச்சரித்து வருவது சகலருக்கும் தெரியும்.
இது காழ்ப்புணர்ச்சியில் சொல்லும் கருத்தா?.. அல்லது ஒரு விமர்சன நோக்கில் சொல்லப்படும் கருத்தா என்பதை தீர்மானிக்க வேண்டியது தனி நபர்களோ அன்றி குழுக்களோ தனியொரு கட்சியோ அல்ல. பரந்து பட்ட மக்களே தீர்மானிக்க வேண்டும்.யாழில் நடக்கும் ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து கேள்வி கேட்ட பொழுது வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு எதிராக அவர் கருத்து சொன்னதாகவும் ஆட் கடத்தல் குறித்து பதில் சொல்லியிருந்தது குறைவு என்று சூத்திரம் சொன்னது சுத்தப்பொய்தானே!...
கனடாவில் இருந்து வானொலியை கேட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் முக்கிய உறுப்பனர்கள் சிலரே செவ்வியை பாராட்டி அமைச்சரோடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு கதைத்துள்ளனர்.
இது இப்படியிருக்க அனாகரீகாம், காழ்ப்புணர்ர்சி குறித்து எழுதி ஈ.பி.டி.பி தலைவர் மீது பாய்ச்சல் நடத்துவது முறையோ?....
வடக்கு கிழக்கு மாகாணசபையின் வழி நடத்தலில் முன்னின்று செயற்பட்ட மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நல்ல பாம்பு வேசம் கொண்டு ஈழ மக்களின் புரட்சிகர சிந்தனையாளர் தோழர் நாபாவை பலியெடுத்த புலிக்கூட்டில் இணைந்து நஞ்சு கக்குகின்றார்.
இவரை அம்பலப்படுத்துவது தவறா?.... பிரேமச்சந்திரனின் வண்டவாளங்களை வெளிப்படுத்துவதே ஈ.பி.டி.பி தலைவரின் நோக்கமாக இருந்திருக்கும். இதற்கு சூத்திரம் எதற்கு ஆத்திரம் கொள்ள வேண்டும்?....
அரசியல் நாகரீகம் பற்றி யாருக்கு சொல்கிறீர்கள்?.... முன்னாள் முதலமைச்சர் தோழர் வரதராஐப்பெருமாள் கொழும்பில் வைத்து ராஐதந்திரிகளோடு பேசியவைகள் உங்களுக்கு அனாகரீகமாக தெரியவில்லையா?...
13 வது திருத்தச்சட்டம் காலாவதியாகிப்போன ஒன்று அது சரிவராது என்றும்,
ஈ.பி.டி.பி க்கு ஒரு ஆசனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். சாவகச்சேரி சம்பவத்தை ஈ.பி.டி.பி யோடு முடிச்சுப்போட்டு அதனால் கிடைக்க இருந்த ஒரு ஆசனமும் கிடைக்காது என்றும்,
முன்பு புலிகள் ஆயுதக்குழுவாக இருந்தார்கள். இப்போது அந்த இடத்தில் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுவாக இருந்து செயற்படுகின்றது என்றும் ஈ.பி.டி.பி க்கு எதிராக கருத்து சொன்னாரே!...அதை ஏன் நீங்கள் காழ்ப்புணர்ச்சி என்று கூறவில்லை?.. அரசியல் அனாகரீகம் என்று கூறவில்லை?...
இவைகளுக்கு ஈ.பி.டி.பி ஏதாவது பதில் சொல்லியிருக்கின்றதா?... அல்லது வரதராஐப்பெருமாளின் கருத்தை வைத்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு எதிராக ஏதாவது பரப்புரை செய்திருக்கின்றதா?....
தேர்தல் காலத்திலும் சரி ஏனைய சூழலிலும் சரி ஈ.பி.டி.பி தமிழ் தேசிய கூட்டைப்பு தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏனையவர்களுக்கு எதிராகவே பரப்புரை செய்திருக்கின்றது. மாற்று ஐனநாயக கட்சிகளுக்கு எதிராக எந்த பரப்புரைகளையும் செய்திருக்கவில்லை என்பது அரசியல் நாகரீகம் என்று தோன்றவில்லையா?....
ஈ.பி.டி.பி யின் வெற்றியை சகித்துக்கொள்ளாத தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி க்கு எதிரான சேறு பூசம் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. ஆட்கடத்தல், வன்முறை என்று பரப்புரை செய்யும் அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி காய்ச்சல் தொற்றியிருக்கின்றது. அந்த காய்ச்சல் சூத்திரத்திற்கும் தொற்றியிருக்கின்றதா?....
மொட்டைக்கடிதத்தை எழுதி சேறடித்த காரணத்திற்காக யாழ் மாநகரசபை துணை முதல்வர் றீகன் பதவி விலக வேண்டும் என்று கோருவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சேறடிப்பை விடவும் பல படிகள் மேல் அல்லவா?...
சீதை தீக்குளித்து கற்பை நீரூபித்தது போல் செய்து காட்டுங்கள் என்று கூறும் நிலப்புரவுத்துவ பெண்ணடிமை சிந்தனையா சூத்திரத்தின் ஆதாரம்?...
இராமன் ஏன் தீக்குளித்து தன் கற்பை சீதைக்கு முன்னால் நிரூபித்திருக்கவில்லை என்று கேட்கும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான முற்போக்கு சிந்தனைகள் தெரியாதா உங்களுக்கு?....
சும்மா இருந்து சூத்திரம் எழுதாமல் சுமைகளை சுமக்கும் சுகுத்தோழருடன் போய் நின்று பாத்திரம் ஏற்று செயற்படுங்கள். கள நிலை புரியும் உங்களுக்கு!....
வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்தது போல் தளத்தில் இருக்கும் ஐனநாயக கட்சிகளுக்கிடையில் ஐக்கியத்திற்கான முனைப்புகள் நடந்து வரும் தருணத்தில் நீங்கள் எழுதி அதற்கு நாங்களும் பதில் எழுதி ஐக்கிய முயற்சிகளை குழப்பாதீர்கள்!
ஈ.பி.டி.பி தன் மீதான சேறடிப்புகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலான தர்ம யுத்தம் தொடங்கியிருக்கிருக்கிறது... விரும்பினால் அதற்கு ஆதரவு தாருங்கள்... இல்லை என்றால் விலகியிருங்கள்!... ஜனநாயக சூழல் பிறந்திருக்கிறது... பலதையும் பலரும் எழுதுவார்கள்! சூத்திரா நீ எந்த பக்கம்?...
நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என்றால் சொத்திக்கண் கொண்டு பாராமல் அனைத்தையும் நேர் கொண்டு பார்க்க பழகு!......
சூரிய புத்திரன்
நன்றி - வெளிச்சம் இணையம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’