வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 மே, 2010

கொழும்பின் சில பிரதேசங்களுக்கான மின் விநியோகம் தற்காலிகமாக துண்டிப்பு

தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல பாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று மின்சார சபையின் தலைவர் வித்யா அமரபால தெரிவித்தார்.

கொழும்பு 13, 14, 15க்குட்பட்ட பிரதேசங்களிலேயே இந்த மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இன்று இரவுக்குள் குறித்த பிரதேசங்களுக்கான மின் மீள விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
உப மின் நிலையங்கள் நீரினால் மூழ்கியுள்ள நிலையிலேயே இந்த மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஹொரண, ஹோமாகம, கெஸ்பாவ, பிளியந்தல, ஜா-எல, களனி, ராகமை மற்றும் அவிசாவளை போன்ற பிரதேசங்களுக்கான மின் விநியோகம் நேற்று முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும் குறித்த பிரதேசங்களுக்கான மின் விநியோகத்தினை மீளவும் வழங்க விரவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த மின்சார சபை, கொழும்பு, மொனராகலை மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களில் நேற்றுமுதல் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம் மீளவும் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’