
வாக்கெடுப்புக்கள் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10 மணி வரை இடம்பெறவிருக்கிறது.
இதேவேளை, சில பிரதேசங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தன. ஆளும் தொழிற்கட்சித் தலைவர் கோர்டன் பிறவுன், பழமைவாத கட்சித் தலைவர் டேவிட் கமெரோன் மற்றும் லிபரல் டெமோகிராட் கட்சித் தலைவர் நிக்ளெக் ஆகியோர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
பிந்திய கருத்துக் கணிப்புக்களின்படி இந்தத் தேர்தலில் பழமைவாதக் கட்சியே வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தக் கட்சி இந்தத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதில் சாத்தியமில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’