வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 மே, 2010

வானில் ஏற்றிச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு மாணவி அடிகாயங்களுடன் ஆஸ்பத்திரியில்!//காயங்களுடன் மயங்கிய நிலையில் பெண்மணி வல்லைவெளிப் பற்றைக்குள்! அவர் மீட்கப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில்



பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைச் சிலர், பல வந்தமாக வானில் ஏற்றி, தாக்கிய பின்னர் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில் தள்ளி விழுத்திவிட்டுச் சென்றுள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்தச் சம்பவத்துடன் நான்கு பேர் சம் பந்தப்பட்டுள்ளனர் என்றும், மாணவியின் வாயில் ஏதோ திராவகம் ஊற்றப்பட்டு, தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
மாணவி கூக்குரலிடவே பலமாகத் தாக்கப்பட்டதாகவும், அவ்வேளை அங்கு சிலர் கூடியதை அடுத்து அவரைத் தள்ளி விழுத்திவிட்டு வானில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வடமராட்சி மகளிர் கல்லூரி ஒன்றில் உயர்தர வகுப்பு மாணவியான சண்முகராஜா அனுஷியா (வயது 18) என்பவரே தாக்கப்பட்டு அடிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை 5 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தனிப்பட்ட பிரச்சினையா அல்லது கடத்தல் சம்பவமா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை// வல்லை வெளிப்பற்றைக்குள் காயங்களுடன் பெண்மணி ஒருவர் மயங்கிய நிலை யில் காணப்படுவதாக வழிப்போக்கர் தெரிவித்த தகவலை அடுத்து, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் அவர் மீட்டெடுக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த யுவதி வழங்கிய தகவலின்படி
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்துப் பின்னர் அங்கிருந்து வெளியேறி கரவெட்டிப் பகுதியில், தான் வசித்துவந்ததாகவும்  திங்கட்கிழமை காலையில் நான்குபேர் தன்னை வழிமறித்து வாகனத்தில் கடத்தியதாகவும் பின்னர் வல்லைவெளிப் பற்றைக்குள் செவ்வாய்க்கிழமை காலையில் கண்விழித்தபோது கிடப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
தலைப்பகுதி; கழுத்து பிடரிப்பகுதிகளில் சிறிய கத்தியால் கீறப்பட்ட காயங்கள் காணப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.
பெண்மணியின் உடலில் ஏற்பட்ட சிறுகாயங்கள் மற்றும் உபாதைகளினால் அவர் இயல்புநிலையில் காணப்படவில்லை என்றும், ஆனால் ஆபத்து ஏதுமில்லை என்றும் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் பெண்மணி கொடுத்த முறைப்பாட்டின் பிரகாரம் அவரின் பெயர் வி. லங்காதேவி (வயது 37) எனக்குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’