முறைப்பாடு செய்யப்படும் எந்த வகையான போர்க்குற்றம் குறித்தும் விசா ரணை செய்யும் பூரண அதிகாரம், இலங்கையில் நிறுவப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.
அத்தோடு ஆணைக்குழு கண்டறிந்த தகவல்களை ஒழிவு மறைவின்றிப் பகிரங்கப்படுத்துவதும் மிகவும் அவசியம்.
இவ்வாறு அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் வலி யுறுத்தினார்.
அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் நேற்றிரவு (இலங்கை நேரப்படி 10.30 மணி) நடத்திய உத்தியோகபூர்வ சந்திப் பின் பின்னர், இருவரும் சேர்ந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.போர்க்கால அட்டூழியங்கள் குறித்து ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் எந்த வகையான முறைப்பாட்டை யும் விசாரிப்பதற்கான பூரண அதிகாரங்களும் அதற்கான வளங்களும் அரசினால் ஆணைக் குழுவுக்கு வழங்கப்படுவதும் மிகவும் பிரதானமானதும் அவசியமானதும் ஆகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுக்கு விஜயம் மேற் கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்றிரவு 10.30 மணி (இலங்கை நேரப்படி) அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின் ரனுடன் பேச்சு நடத்தினார். அதன் பின் இருவரும் சேர்ந்து ஊடகவியலாளர் மாநாடு நடத்தினார்கள்.
அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் இது குறித்து அங்கு தெரிவித்ததாவது:
நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப் பினர்கள் அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்பட வேண்டும். அவர்களின் சிபாரி சுடன் அரசாங்கமும் உரிய கவனம் செலுத் துவதுடன் அவற்றை பகிரங்கப்படுத்துவ தும் மிக முக்கியம்.
ஆணைக்குழு முன் சாட்சியம் அளிப் போருக்கும், ஆணைக்குழு உறுப்பினர் களுக்கும் போதுமான காத்திரமான பாது காப்பு வழங்கப்படுவது மிகவும் அவசிய மாகும். இதில் அரசாங்கம் கூடுதல் கவன மும் சிரத்தையும் எடுக்க வேண்டும்.
ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் சுதந்திரமானவர்களாகவும் எவருக்கும் பாரபட்சம் காட்டாதவர்களாவும், திறமை சாலிகளாகவும் தகுதியானவர்களாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்.
இந்த நல்லிணக்க ஆணைக்குழு இலங் கையில் 40 வருடங்களாக நடைபெற்ற சிவில் யுத்தத்தினால் பாதிப்புற்ற அந்நாட்டு மக்களின் விருப்பங்களையும் தேவை களையும் பாதிப்புகளையும் பிரதிபலித்து அவற்றை வெளிக்கொணர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.
இலங்கையின் வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்த முக்கிய கருத்துகள் வருமாறு:
* ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சகல சுதந்திரங்களும் கொண்டவர்களே. ஆணைக்குழுவுக்கு வேண்டப்படும் அதி காரங்கள் போதிய அளவு வழங்கப்பட்டுள் ளன.
ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்பார்புகளை நிறைவு செய்து வெற்றி யளிக்கும் என்ற நம்பிக்கையுடன் அது தமது பணிகளை ஆரம்பிக்க ஊக்கமளிக்க வேண்டும்.
* ஆணைக்குழு தனது பணிகளை எவ்வித தடையோ அல்லது இடையூறோ இன்றி ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதே எமது வேண்டுதலாகும்.
* எமது ஆணைக்குழுவின் விசார ணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, எங்களுக்கு உதவி தேவை என்று கருதும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை யுடன் தொடர்புகொண்டு பேசவும் இந்த விடயங்களில் அதன் அனுபவம் மற்றும் பாண்டித்தியத்தைப் பகிர்ந்துகொள்ளவும் நாம் மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடன் முன்வருவோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’