வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 29 மே, 2010

யாழ். பெரிய பள்ளிவாயலில் 20 வருடங்களின் பின் தொழுகை

யாழ்பாணத்தில் 20 வருடங்களின் பின் முஸ்லிம் பெரிய பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகை நடத்தப்பட்டது.
1990 களில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அங்குள்ள முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர். தற்போது அங்கு நிலவும் அமைதிச் சூழ்நிலை காரணமாக படிப்படியாக முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சோனகத் தெருவிலுள்ள பெரிய பள்ளிவாயல் துப்புரவு செய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகை நடத்தப்பட்டது. ஜும்மாத் தொழுகையுடன் இணைந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தை மௌலவி அல்ஹாபிஸ் அப்துல் காலிக் நடத்தி வைத்தார்.
இதில் நாட்டின் பலபாகங்களையும் சேர்ந்த 3000 முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அஸர் தொழுகையின் பின் விஷேட பிராத்தனை மற்றும் சொற்பொழிவை மௌலவி இஸ்மாயில் நடத்தினார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’