சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்களும் இருக்கலாம் என்ற நம்பப்படும் 26 சட்டவிரோத குடியேறிகளுடன் சென்ற படகை அவுஸ்திரேலிய கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகினை அவதானித்த டாஸ் 8 ரக ரோந்து விமானம் கரையோர காவற்படையினருக்கு வழங்கிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் அனைவரது அடையாளங்கள், எந்த நாட்டை சேர்ந்தவர்கள், மற்றும் அவர்களது தேக ஆரோக்கிய நிலைகளை அறியும் நோக்கில் கிறிஸ்துமஸ் தீவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கோர்னர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக குடியேற்ற வாசிகளை ஏற்றிச் சென்ற 51 படகுகளை அவுஸ்திரேலிய கைப்பற்றியுள்ளனர்.
மேற்கு அவுஸ்திரேலிய கரையோர பிரதேசத்தில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையரும் இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்பவர்களுக்கு உடனடியாக அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
அவுஸ்திரேலியாவின் இந்த அறிவித்தலுக்கு பல மனித உரிமைகளை பேணும் அமைப்புக்களும், சர்வதேச தொண்டர் அமைப்புக்களும் தங்களது கடும் எதிர்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’