வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 மே, 2010

சீனாவில் இயங்கும் சிசி டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி சேவை இலங்கையிலும் விஸ்தரிப்பு

China Animated Flag சீனாவில் இயங்கும் சிசி டிவி நிறுவனம் இலங்கையிலும் தனது செய்தி சேவையினை விஸ்தரித்துள்ளது. பிரதமர் டிஎம் ஜெயரட்ண இன்று மாலை 7.20 மணியளவில் இதனை உத்தியோக பூர்வமாக பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஹெச் விருந்தகத்தில் ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய, இலங்கை ஊடகத் துறையை பொறுத்த வரையில் சர்வதேச அளவிற்கு எமது கலாசாரத்தையும், நடைமுறைகளையும் கொண்டு செல்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் இப்போது கிட்டியுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் இருந்த பயங்கரவாத நிலைமை தற்போது இல்லை. இந்நிலையில் சீனா-இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு நீண்டகால பழமைவாய்ந்தது என தெரிவித்தார். இப் புதிய ஊடக அறிமுகத்தின் ஊடாக அதனை மேலும் வலுப்படுத்தலாம் என நம்புகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’