இலங்கையில் தாம் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டிய  தேவை இன்னமும் உள்ளது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்  தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு  அறிவித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் நலன்புரி நிலையங்களுக்கும்,  மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இடங்களுக்கும் சென்றுவர தங்களுக்கு அனுமதி  வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் கெல்லன்பர்கர்  கோரியுள்ளார் இந்த இரண்டு கோரிக்கைகளுமே "அங்குள்ள மக்களின் பாதுகாப்பை  கருதியே" என்றும் அவர் கூறுகிறார்.
விடுதலைப் புலிகளுடனான போர் உக்கிரமாக  நடைபெற்று வந்த இறுதி நேரத்திலும் அதற்கு பிறகும் சில சதுரகிலோமீட்டர் பரப்பளவே  கொண்ட குறுகிய நிலப்பரப்பில் இருந்து பணியாற்றிய ஒரே நிறுவனம் தமது அமைப்புதான்  என்பதனையும் ஜேக்கப் கெல்லன்பர்கர் சுட்டிக்காட்டுகிறார். 
இலங்கையைப் பொறுத்த வரையில், அங்கு தாங்கள் மேலும் பணியாற்ற  வேண்டியுள்ளது என்றும் கூறுகிறார்.
அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 3000 மக்களை தொடர்ந்து  தமது அமைப்பு சென்று பார்வையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’