வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 25 மே, 2010

திருநெல்வேலி புதிய கொலணி குடியேற்ற மக்கள் தமது குடியிருப்பு கோரிக்கை சம்பந்தமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு!

நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் கீழ் திருநெல்வேலி ஜே 114 புதிய கொலணி மற்றும் பாரதிபுலம் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு காணி உரிமம் கோரிக்கை தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இன்று (25) காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைச்சுப் பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் ஜே 114 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் சுமார் 75 குடும்பங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தனியார் மற்றும் கோவில் நிர்வாகம் என்பவற்றுக்குச் சொந்தமான புதிய கொலணி மற்றும் பாரதிபுலம் குடியேற்றத்தில் சுமார் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் மேற்படி மக்கள் அக்காணிகளை தமக்கு நிரந்தர வதிவுடமையாக்கித் தர வேண்டும் என அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
அம்மக்களின் கோரிக்கை தொடர்பில் அவதானஞ் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்விடயம் தனியொருவர் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல என்பதுடன் சம்பந்தப்பட்ட தனியார் காணி உரிமையாளர்களின் காலணியினர் மற்றும் கோவில் நிhவாகத்தினர் ஆகியோருடனும் நல்லூர் பிரதேச செயலாளரையும் உள்ளடக்கி விரிவான கலந்துரையாடலின் மூலமே ஓர் இணக்கமான தீர்வினை எட்ட முடியும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக எதிவரும் 27ம் திகதி சகல தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தி ஓர் இணக்கம் காண்பது எனவும் இக்கூட்டத்தின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.
ஜே 114 கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுடனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இச்சந்திப்பின் போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் நல்லூர் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் அ. ரவீந்திரதாசன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’