புதிய அமைச்சைப் பொறுப்பேற்று இன்று (07) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.யாழ் கச்சேரி முன்றலிலிருந்து வாகனப் பேரணியுடன் அழைத்து வரப்பட்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ் வேம்படிச் சந்தியிலிருந்து பாடசாலை மாணவ மாணவிகளின் பாண்ட் இசை அணிவகுப்புடன் நகர்ந்த பேரணியுடனும் மங்கள வாத்தியத்துடனும் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வழிநெடுங்கிலும் மக்கள் பெருமளவில் திரண்டிருந்து தமது மக்கள் தலைவனுக்கும் நாடாளுமன்ற உறு;பபினர்களுக்கும் பொன்னாடைகளைப் போர்த்தியும், மாலைகளை அணிவித்தும் வரவேற்ற அதேவேளை பட்டாசுகளைக் கொழுத்தியும் தமது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்தனர்.
வீரசிங்கம் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் ஆகியோருக்கும் உணர்ச்சி பொங்க கைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அரங்கில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், பௌத்த மத குருமார்களும் ஏனையோரும் ஆசியுரைகளை வழங்கினர்.
தொடர்ந்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் உரையாற்றும் போது ஏனைய கட்சிகள் பொய்ப்பிரசாரங்கள் மேற்கொண்ட போதிலும் எமது மக்கள் எமக்கு வழங்கிய ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்கின்ற அதேவேளை எமது மக்களின் நல்வாழ்வுக்காக நாம் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
தொடர்ந்து சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் உரையாற்றுகையில் எங்களுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆதரவிற்கு நாம் நன்றி தெரிவிக்கின்ற அதேவேளை எங்களை உங்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பி வைத்தது போன்று எதிர்காலத்தில் மக்களுக்கான கடமைகளிலும் சேவைகளிலும் நாம் நிச்சயமாக அயராது உழைப்போம் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் சிறுப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது கட்சிக்கு பல அரசியல் கட்சிகள் அவதூறான பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த போதிலும் மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர்.
இதன் மூலமாக நாம் 03 பாராளுமன்ற ஆசனங்களைப் பெறக் கூடியதாக இருந்தது. எனவே உங்கள் நம்பிக்கை வீண் போகாமல் எமது பணிகள் எதிர்காலத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்படுமென்றும் அதற்கு மக்களாகிய உங்களின் ஆதரவை நாடி நிற்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் நல்லை அதீன முதல்வர் சோமசுந்தர பராமாச்சாரி சுவாமி யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை ஜிம்மா பள்ளிவாசல் மௌலூத் மௌலவி யாழ் சிறி நாகவிகாரை விகாராபதி யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






































0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’