வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 மே, 2010

ரயில்சேவைகள் வழமைபோல் : வெசாக்கை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள்

நாட்டின் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பி உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவிக்கின்றது.
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாட்டின் போக்குவரத்துச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
அதன்படி பல ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பி உள்ளதாகவும் ரயில் சேவைகள் அனைத்தும் வழமை போல் இடம்பெறுவதாகவும் ரயில்வே திணைக்கள ஊடகப் பேச்சாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
அதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் நடத்தப்பட இருப்பதாகவும் ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் குறிப்பிட்ட ரயில்சேவைகள் கோட்டை, மருதானை ரயில் நிலையங்களில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக களுத்துறை, அனுராதபுரம் தாம்போதிகளுக்குச் செல்லும் பௌத்த மக்கள் நலன்கருதி விசேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’