
அமெரிக்க விசா விண்ணப்பங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெ.தூதரகம் அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் தொடர்பில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இக்கட்டண அதிகரிப்பு குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் புதிய கட்டணங்கள் அமுலுக்கு வரும் என அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் வணிக நடவடிக்கைகள், சுற்றுலா, மாணவர்களுக்கான விண்ணப்பங்களுக்கு 140 அமெரிக்க டொலர்களும் (ரூபா. 16,100), தற்காலிக பணியாளர்கள், மத விவகாரங்களுக்கான பயணிகள் உள்ளிட்டோருக்கு 150 அமெரிக்க டொலர்களும் (ரூபா. 17,300), முதலீட்டாளர்களுக்கு 390 அமெரிக்க டொலர்கள் (ரூபா.44,900) அறவிடப்படவுள்ளன.
கட்டணங்கள் யாவும் வங்கிக் கட்டளைகளினூடாக அனுப்பப்பட வேண்டும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களை, http://srilanka.usembassy.gov/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’